மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு உரையில் அவர் பேசியபோது, அரசியல் தலையீடும் சுயாதீனமின்மையும் 2022ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணிகள் எனக் குறிப்பிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் பெரும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ‘பணம் அச்சிடும்’ நடைமுறை பின்பற்றப்பட்டது.
இதனால் பணவீக்கம் 70 சதவீதத்திற்கு அருகில் உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
விலை நிலைத்தன்மையும் நிலையான பொருளாதார வளர்ச்சியும் உறுதிப்படுத்த, தெளிவான அதிகாரப்பூர்வ பணிக்கூற்று கொண்ட வலுவான மற்றும் சுயாதீன மத்திய வங்கி அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்காக 2023 மத்திய வங்கி சட்டம் ஒரு முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நிதி அதிகாரிகளுடன் வெளிப்படையான உரையாடல் அவசியம் என்றாலும், மத்திய வங்கியின் செயற்பாட்டு சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வீரசிங்க வலியுறுத்தினார்.

