ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குகிறார்.
முதலில் மயிலிட்டி மீன்வளத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளை அவர் ஆரம்பிக்க உள்ளார்.
இதன் மூலம் வடக்கு மீன்வள சமூகத்திற்கும், பிற மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி கப்பல்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் வட மாகாண மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதில் பெறுவதற்கான வசதியுடன், குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில்; திறந்து வைக்க உள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் பொது நூலகத்தில் ‘மின் நூலகத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் உலகளாவிய ரீதியில் அந்த நூலகப் புத்தகங்களை ஆன்லைன் வழியாகப் பயன்படுத்தும் வசதி கிடைக்கும்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான கட்டுமானப் பணிகளும் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

