ஆசிரியர் கருத்துக்கள் உலகம் கட்டுரை

உலக ஒழுங்கில் மாற்றம் (மோனிங்.எல்கே இன் ஆசிரியர் தலையங்கம்)

(தமிழில் தாமரைச்செல்வன்)

டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கைகள் காரணமாக உலக அரசியல் ஒழுங்கு சீர்குலைந்து வருகின்றது.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் கொரியப் போருக்குப் பின்னரும் இல்லாத அளவிற்கு கடுமையான பாதுகாப்பு நெருக்கடியை ஐரோப்பாவும் அமெரிக்க கூட்டாளிகளும் எதிர்கொண்டு வருகின்றன.

இதற்கு ஒத்த சூழல் கடைசியாக நிகழ்ந்தது பிரித்தானியக் குடியரசு வீழ்ச்சியடைந்த காலத்திலாகும்.
அப்போது பிரிட்டன் தனது காலனித்து நாடுகளை விரைவாகக் கைவிட்டு விலகியதால், 1947 ஆம் ஆண்டில் கிரேக்கப் பிரச்சினை உருவானது.
சுயஸ் கால்வாயிலும், மெடிட்டரேனியனின் பெரும்பகுதியிலிருந்தும் விலகிய பிரிட்டனின் இடத்தை, பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்ப அமெரிக்கா எடுத்துக்கொண்டது.
அப்போது சோவியத் ஒன்றியம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் அபாயமும், வர்த்தக வழிகள் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயமும் நிலவியதால், அமெரிக்கா ட்ரூமன் கொள்கையை அறிவித்தது.
அதன்பின்னர் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகியோரின் வெளிநாட்டு கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட உலக ஒழுங்கு, இன்று முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
பல தசாப்தங்களாக நிலைத்தன்மையை வழங்கிய பன்முகத்தன்மையைக் (அரடவடையவநசயடளைஅ) குலைக்கும் கடைசி அடிகளை டிரம்ப் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா மோதல் தொடர்பாக டிரம்ப் எடுத்துக் கொள்ளும் அணுகுமுறை, ஐரோப்பாவுக்கான நம்பகமான கூட்டாளி என்ற அமெரிக்காவின் பெயரை வேகமாக சேதப்படுத்தி வருகிறது.
ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பு அமைப்பை புறக்கணித்து அலட்சியம் காட்டியதே, டிரம்ப் காட்டும் அழுத்தத்திற்குக் காரணமாக உள்ளது.

வர்த்தக தடை மற்றும் சுங்கச் சீர்குலைவுகள் உலக சந்தைகளை அதிர வைத்துள்ளன.
டிரம்ப் நிர்வாகம் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை இலக்காகக் கொண்டு விதித்த சுங்கக் கொள்கைகள், பொருளாதார தேசியவாதத்தையும், பரஸ்பர நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கையையும் (வசயளெயஉவழையெட னipடழஅயஉல) வலுப்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக உலகளாவிய வர்த்தக நெறிமுறைகள் பாதிக்கப்பட்டு, புதிய உறுதி அற்ற நிலை உருவாகியுள்ளது. இலங்கையும் இவ்வாறான திடீர் வர்த்தகச் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்.

கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து, சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ளும் நோக்கில் ஜனநாயக வலுவான கூட்டுறவுகளை உருவாக்க முயன்றிருந்தன.
ஞருயுனு கூட்டணியின் கீழ் பாதுகாப்பு, தொழில்நுட்பம், முதலீடு ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் ரஷ்ய எண்ணெய் வாங்கிய இந்தியாவுக்கு டிரம்ப் விதித்த கடுமையான சுங்க வரிகளும், அவரது விமர்சனங்களும், இந்த உறவுகளை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில், சீனா, ரஷ்யா, ஐரோப்பா ஆகியவை இணைந்து புதிய உலக ஒழுங்கை உருவாக்க முயல்கின்றன.
தங்களுக்கு ஏற்ற வகையில் உலகத்தை மறுவடிவமைப்பதற்கான வாய்ப்பை ரஷ்யாவும் சீனாவும் பயன்படுத்திக் கொள்கின்றன.
அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் (ளுஊழு), இந்திய பிரதமர் நெருக்கமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீனத் தலைவர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து நட்புறவை வெளிப்படுத்தினார்.
இது டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான மறைமுக செய்தியாகக் கருதப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் புடினுக்கு சர்வதேச மேடையில் நம்பகத்தன்மையையும் செல்வாக்கையும் மீட்டெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஷி ஜின்பிங், அமெரிக்காவுக்குப் பதிலான உலக வல்லமைக்கான மாற்று சக்தியாக தன்னை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து மேற்கத்திய ஆதிக்கத்தைக் குறைத்து, புதிய உலக ஒழுங்கை அமைக்க வேண்டும் என்ற தமது பழைய கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆனால் அந்தக் கூட்டத்தில் இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.
இத்தகைய சந்திப்புகள் இலங்கைக்கு முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளை வழங்கக்கூடியவை.
அதில் பங்கேற்காமல் விட்டதன் மூலம், இலங்கை மேற்கத்திய செல்வாக்கைத் தாண்டி தன் புலனாய்வை விரிவுபடுத்தும் வாய்ப்பை இழந்துவிட்டது.
எதிர்காலத்தில் இத்தகைய வாய்ப்புகளை இழக்காமல் கவனமாக செயல்பட வேண்டும் என வெளிநாட்டு கொள்கை ஆலோசகர்களிடம் நம்பிக்கை வைக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்