யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று (புதன்கிழமை) மேலும் ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக, இன்னும் ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று 10ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கிய நிலையில், இன்று 42ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 51 நாட்கள் அகழ்வு பணிகளில், இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஏழு எலும்புக்கூட்டு தொகுதிகளுடன், மொத்தம் 213 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 231 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்.

