கடற்படை 40 ஆயிரம் தமிழர்களை கொன்றதாக தெரிவித்தமைக்கு ஆதாரம் இல்லையென வசந்த கரண்ணகொட நேற்று( 03-09) கடற்படை முன்னாள் கட்டளை தளபதி வசந்த கரண்ணகொட தெரிவித்துள்ளார
இலங்கையில் கடற்படையின் பங்கு மற்றும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை (LTTE) முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பில் கடற்படை கட்டளை தளபதி வாசந்த கரண்ணகொட சுயசரிதை ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ புத்தகம் அமேசான் விற்பனை நிறுத்தப்பட்டாலும் தனது சாதனைகள் மறைக்கப்பட முடியாது என்று கடற்படை முன்னாள் தளபதி வாசந்த கரண்ணகொட தெரிவித்துள்ளார்
2005 செப்டம்பர் முதல் 2009 ஜூலை வரையிலான காலத்தில் கடற்படைத் தளபதி பதவியில் இருந்த கரண்ணகொட, அமேசான் நிறுவனத்தின் முடிவால் அதிர்ச்சி அடைந்ததாக என்று கூறினார்.
இதற்கு காரணமாக, International Truth and Justice Project (ITJP) யு. கே. சட்டங்கள் மீறப்படுவதாக எச்சரித்ததை அமேசான் ஏற்றுக்கொண்டுள்ளது
தென் ஆப்பிரிக்காவில் நிறுவப்பட்ட ITJP 2013 முதல் இலங்கையை யுத்த குற்றங்களில் குற்றம்சாட்டி வருகிறது.
யாஸ்மின் சூக்கா, யு.என். செயலாளர் பான் கி மூன் குழுவில் பணியாற்றியவர், இவர் இலங்கை படைகள் கடைசிக் கட்ட யுத்தத்தில் 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்றதாக குற்றம்சாட்டினார்.
இதே நேரத்தில், பாலஸ்தீனில் இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சிய ஆதரவு உடன் நடைபெறும் இன ஒழிப்பின் குறித்த புகைப்படங்கள் குறைவாக மட்டுமே காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளாhர்
முன்னாள் கடற்படை தளபதி கரண்ணகொட, ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ; ஜகத் ஜெயசூரிய, கருணா அம்மன் மற்றும் பிறருக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

