ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.
விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பெண்களும், 6 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய தங்காலை நகர சபை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிரே வந்த வாகனத்துடன்; மோதி 200 மீற்றர் பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர், விமானப்படை, தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
விபத்து நடந்த போது பேருந்தில்; 35 இற்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
{{CODE 1}}
இதையும் படியுங்கள்>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை OMP மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி

