இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) பெற்றுள்ள 10,517 முறைப்பாடுகளின் விசாரணைகளை 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய விசேட திட்டம் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தின்படி, 75 தகுதியான நபர்களைக் கொண்ட 25 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.
இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெறுவர்.
இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) காணாமல் போனவர்களையும், மாயமானவர்களையும் பற்றிய விசாரணைகள் மற்றும் அவற்றின் அறிக்கைகள் வெளியிடும் பொறுப்பை வகித்து வருகிறது.
இதுவரை மொத்தம் 16,966 முறைப்பாடுகள்; அலுவலகத்துக்கு கிடைத்துள்ளன.

