எல்லா – வெல்லவாயை சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை நகரசபை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எஸ்யூவி வாகனத்துடன் மோதியதையடுத்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதில் குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

