கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

