இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரின் மனநலப்பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, மனநல நிபுணர் டாக்டர் எஸ். ஜனானி, ‘திகைப்பும் கவலையூட்டும்’ ஒரு சம்பவத்தை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதுபடி, 9 முதல் 15 வயது குழந்தைகள் நான்கு பேருக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்ததாகவும், சிலர் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டும் எனத் திறந்தவெளியிலேயே பேசுவதும் அவருக்கு அதிர்ச்சியளித்ததாக கூறினார்.
மனநல நிபுணர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார், சிறுவர்களிலும் 9, 10 வயதிலிருந்தே மனநிலை மாற்றங்கள் (அழழன னளைழசனநசள) காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
.
12 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் காயப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்;
கை விரல்கள் அல்லது கையின் பகுதிகளில் வெட்டுவது போன்ற செயல்கள் அதற்கான எடுத்துக்காட்டாகும்.
1995–2021 வரை இந்திய சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரின் தற்கொலை எண்ணங்களை ஆய்வு செய்துள்ள ஒரு ஆய்வு, கடந்த 26 ஆண்டுகளில் தற்கொலை விகிதம் அதிகரித்து வந்ததைக் காட்டுகிறது.
மேலும், 1992–2021 வரை யnஒநைவல நோய்களின் கணக்கில் 113.3மூ உயர்வு ஏற்பட்டது.
குறிப்பாக, 10–14 வயது குழந்தைகளில் அதிகரிப்பு இருந்தது, இது இளம் வயதில் மனநலக் குறைபாடுகள் முதன்முதலில் கண்டறியப்படுகின்றதைத் தெரிவிக்கிறது.
மருத்துவச் சமூகத்தில் இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர், இந்த மனநல பிரச்சினைகள் முன்பிருந்தே இருந்ததாகவும், இப்போது மட்டுமே கவனம் செல்ல ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

