செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது.
இதன்படி, செஞ்சிலுவை சங்கம் விரைவில் பங்கேற்கும் என அறியமுடிகிறது.
செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.
மேலும், அண்மையில் மரணதண்டனைப் பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலையில் சந்தித்து, தொடர்புடைய விடயங்களைப் பற்றிய தகவல்களை பெற்றுள்ளனர்.
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு நீண்ட அனுபவமும் முறையான நிபுணத்துவமும் இருந்தாலும், முன்னர் அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகள் மூலம் உத்தியோகபூர்வ அழைப்பை பெறாததால், சங்கம் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, நீதியமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் செஞ்சிலுவை சங்கம் விரைவில் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

