ஜப்பானின் பிரதமர் சிகெரு இஷிபா ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில்;, சிக்கலான அரசியல் அழுத்தம் உருவாகியுள்ளது.
லிபரல் டெமோகிராட்டிக் பார்ட்டி (LDP) தலைமைக் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுப்பதன் காரணமாக இஷிபா தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இந்த முடிவு ஜூலை மாதத்தில் LDP கூட்டணியானது பெரும்பான்மையை இழந்த பின்னர் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பொதுமக்கள் ஆர்வம் குறைவாகவும், அமெரிக்கா விதித்த வரிகளைப் பற்றியும் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அந்த நிகழ்வின் பின்னணியில், ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட தகவலின்படி, இஷிபா தனது கடமையை ராஜினாமா செய்வதன் மூலம் கட்சியில் பிரிவை தவிர்க்க விரும்பினார் என்று தெரியவருகின்றது

