இலங்கை மின்சார சபை (CEB) தனது அடுத்த கட்டண உயர்வு முன்மொழிவை கடந்த வாரம் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது என்று நம்பத்தகுந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவர், முன்மொழிவு கிடைத்ததை உறுதிப்படுத்திய நிலையில், அதில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த மறுத்தார்.
எனினும, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் தொடர்புடைய விவரங்களை அறிவிக்க உள்ளது.
மற்றொரு ஊநுடீ உயர் அதிகாரி, சபை 6.8 வீத கட்டண உயர்வை கோரியிருப்பதை உறுதிப்படுத்தினார். இன்னும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை

