ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக இதுவரை நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல், தலைநகர் கீவிலுள்ள உக்ரைன் அமைச்சரவை கட்டிடத்தை தீப்பிடிக்கச் செய்து, ஒரு குழந்தையை உட்பட மூவர் உயிரிழக்க நேரிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
இரவு முழுவதும் நடைபெற்ற இந்த தாக்குதலில் ட்ரோன்களும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன.
இதனால் 18 பேர் காயமடைந்ததுடன், பல கட்டிடங்கள் தீப்பிடித்தன.
அமைச்சரவை கட்டிடத்தின் கூரையிலிருந்து புகை எழுந்தது காணப்பட்டது.
அது நேரடி தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது விழுந்த சிதைவுகளால் ஏற்பட்டதா என்பது தெளிவாகவில்லை.
இதுவரை ரஷ்யா, கீவின் மையப்பகுதியில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களைத் தாக்குவதை தவிர்த்து வந்திருந்தது.
அமைச்சரவை அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த கட்டிடம் முதன்முறையாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
ரஸ்சிய தாக்குதலால் அரசாங்கக் கட்டிடத்தின் கூரை மற்றும் மேல்தளங்கள் சேதமடைந்துள்ளன.
கட்டிடங்களை மீண்டும் அமைக்கலாம், ஆனால் உயிரிழப்புகளை மீட்க முடியாது,’ என்று உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ கூறினார்.
உக்ரைன் விமானப்படை தெரிவித்ததாவது, ரஷ்யா மொத்தம் 805 ட்ரோன்களையும் ஏவுகணை ஏமாற்றுப் பொருட்களையும் பயன்படுத்தியது.
இதில் 747 ட்ரோன்களும் நான்கு ஏவுகணைகளும் வீழ்த்தப்பட்டன.
எனினும், நாட்டின் பல்வேறு இடங்களில் 9 ஏவுகணைகள் மற்றும் 56 ட்ரோன்கள் நேரடி தாக்குதல் நடத்தியதாகவும், எட்டு இடங்களில் விழுந்த சிதைவுகள் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.
கீவ் மேயர் விதாலி கிளிச்ச்கோ தெரிவித்ததாவது, தாக்குதலில் ஒரு குழந்தையும் இளம்பெண்ணும் உயிரிழந்தனர்.
கர்ப்பிணி பெண் ஒருவரை உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கிழக்கு ட்னீப்பர் நதிக்கரையிலுள்ள டர்னிட்ஸ்கி மாவட்டத்தில் ஒரு முதிய பெண் குண்டுத் தாக்குதலிலிருந்து தஞ்சம் அடைந்த புகலிடத்தில் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்குப் பகுதியிலுள்ள ஸ்வியடோஷின்ஸ்கி மாவட்டத்தில் ஒன்பது மாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் பல தளங்கள் சேதமடைந்தன.
ட்ரோன் சிதைவுகள் விழுந்ததால் 16 மாடிக் குடியிருப்பு மற்றும் மேலும் இரண்டு கட்டிடங்கள் தீப்பற்றின.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவசர சேவைப் படங்களில், பல குடியிருப்பு கட்டிடங்களின் முன்புறங்கள் இடிந்து, புகை குமிழ்ந்தது காணப்பட்டது.
உக்ரைன் தலைநகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் திமூர் த்காசென்கோ கூறுகையில், ‘ரஷ்யா திட்டமிட்டும் தெரிந்தும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குகிறது’ எனக் கூறினார்.
இதற்கிடையில், மத்திய உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் நகரில் பல வெடிப்புகள் இடம்பெற்றதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதேபோல், கிரிவி ரிஹ் நகரில் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற அடிப்படை வசதிகள் தாக்கப்பட்டன.
தெற்கிலுள்ள ஒடெஸ்ஸா நகரில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கட்டிடங்கள் சேதமடைந்தன.
ரஷ்யா இதுவரை சம்பவம் தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இரு தரப்பினரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று மறுத்தாலும், 2022 பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மேற்குப் உக்ரைன் வான்வழி அச்சுறுத்தலை முன்னிட்டு, போலந்து தன்னுடைய மற்றும் கூட்டமைப்பின் போர் விமானங்களை இயக்கி வான்வழி பாதுகாப்பை உறுதி செய்துள்ளது

