ஊழல் எதிர்ப்பு அமைப்பு, சிவில் விமான ஆணையத்தின் (CAA) உயர்மட்ட பதவிகளில் அரசியல் தலையீடு இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதனை நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிரோஷன் படுக்கா நேற்று (08-09) நடைபெற்ற ஊடக சந்திப்பில், அரசாங்கம் தகுதியற்ற நபர்களை அரசியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு CAA-வின் முக்கிய பதவிகளில் நியமிக்கத் திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
அவர் குறிப்பிட்டதாவது, ‘2023ஆம் ஆண்டில் ஊயுயு 5,530 ரூபா மில்லியன் லாபம் ஈட்டியது.
இலங்கையின் பெயரை உலக அரங்கில் உயர்த்தும் மேற்பார்வை நிறுவனம் என்பதால், இவ்வமைப்பின் பெருமை முக்கியமானது.
ஆனால், இயக்குநர் நியமனம் அரசியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவது வருத்தத்துக்குரியது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் திறமையான, அனுபவமுள்ள நிபுணர்கள் அரசாங்க இயந்திரத்தை நடத்த போதுமான அளவில் இல்லை என்பது வெளிப்படையாகிறது’ எனக் கூறினார்.
ஊயுயு-வின் உயர்மட்ட பதவிகளுக்கு அனுபவமிக்க அதிகாரிகள் நியமிக்கப்படாதது அமைப்பின் முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கும் என்றும், அரசியல் சார்புகளை அடிப்படையாகக் கொண்ட நியமனங்கள் அபாயகரமானவை என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், சர்வதேச அமைப்பு ஒன்றின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதால், அனுபவமற்ற அதிகாரிகளை நியமிப்பது இலங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.

