இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில், மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை மையமாகக் கொண்டு, இந்தக் குழுவின் அறிக்கையை றுவுழு மற்றும் ஐ.நா.வில் பிரிட்டனின் நிரந்தர வதிவிட பிரதிநிதி குமார் ஐயர் வாசித்தார்.
அவரது உரையில், ‘இந்த அறிக்கை இலங்கை கோர் குழுவின் சார்பில் வழங்கப்படுகிறது.
இதில் கனடா, மலாவி, மொண்டெனெக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் அடங்குகின்றன.
அமைச்சர் ஹேரத் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி.
உயர் ஆணையரே, தங்களின் அறிக்கைக்கும் சமீபத்திய இலங்கை விஜயத்திற்கும் நன்றி.
உங்கள் விஜயம், தொடர்ந்துவரும் சவால்களையும், சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகளையும் வலியுறுத்தியது.
உங்கள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் முன்பும் சட்டவிரோதக் கொலைகள், கட்டாய காணாமல் ஆக்கல்கள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், தன்னிச்சையான கைதுகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளது.
இலங்கை தனது கடந்தகாலத்திலிருந்து விலகி, இன்னமும் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் துன்புறுத்தும் ஆழ்ந்த காயங்களை ஆற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை நீக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், சமரசம், நல்லாட்சி, அரசியல் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அரசாங்கத்தின் உறுதிமொழிகள் உண்மையான செயல்பாடுகளாக மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நீண்டகால தண்டனையின்மை பிரச்சினைகளை சமாளிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களிடம் உள்ளூர் நீதித்துறை செயல்முறைகளில் நம்பிக்கையை உருவாக்குவதற்குத் தேவையானது.
முழுமையாக சுயாதீனமாகவும் செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் பொதுத் தீர்ப்பாய அமைப்பை ஆதரிக்கிறோம்.
மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும்.
மேலும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்பது முக்கியமானது.
இலங்கையுடன்இணைந்து செயல்படுவதற்கு எங்கள் கூட்டு நாடுகள் தயார்நிலை இருக்கின்றது ‘ எனக் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

