எந்தவொரு பொதுப்பணியாளரும் தனிப்பட்ட காரணத்துக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள முடியும், எனவும் ஆனால் அதற்காக முறையான விடுமுறையை பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கௌசல்யா அரியரத்னே, செவ்வாய்க்கிழமை (09-09) பாராளுமன்றத்தில், தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பிகர் உறுப்பினர் முஜிபுர் ர{ஹமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
16 இலங்கை ஊடகவியலாளர்கள் இஸ்ரேலில் பயணம் செய்திருந்ததைப் பற்றிப் ; முஜிபுர் ர{ஹமான் கேள்வியெழுப்பினாhர்
ர{ஹமான் கூறியதாவது, இரு ஊடகவியலாளர்கள்; ருபவாஹினியில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட 16 ஊடகவியலாளர்கள் இஸ்ரேல் பயணத்தில் இருந்தனர், எனவும் எனவே அரசாங்கம் எந்த அளவிற்கு இந்த பயணத்தில் தொடர்புடையது என ; கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லை என்று டாக்டர் அரியரத்னே,
தெரிவித்தார். பயணிகள் இஸ்ரேல் அரசாங்கத்தால் தனிப்பட்ட அழைப்பை பெற்றனர் என்றும் அவர் சேர்த்தார்.
இதற்கிடையில், ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிசா, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் செய்தியாளர் சந்திப்பில், இந்த பயணம் முழுமையாக தனிப்பட்டது என்பதையும், அரசாங்க அனுமதியின்றி நடைபெற்றதெனவும் வலியுறுத்தினார்.
‘இவர்கள் தனிப்பட்ட பயணத்தில் உள்ளனர். அரசாங்கம் இதில் சம்பந்தப்பட்டதில்லை,’ என்று ஜெயதிசா கூறினார்.
அவர் மேலும், ‘அவர்கள் எவ்வாறு பயணம் செய்துள்ளனர் என்பது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது. யாரும் இஸ்ரேல் செல்லலாம்; அதற்கு தடையில்லை. இதை நாமும் தடையிட முடியாது,’ என்று தெரிவித்தார்.
அவர், ஊடகவியலாளர்கள் பயணத்தைப் பற்றிய கருத்துக்கான பதிலை ஊடகவியலாளர்கள் திரும்பி வரும் வரை காத்திருந்து கேட்குமாறு வலியுறுத்தியார்.
பயணத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து விடுமுறை கோரியிருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

