நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட பதிவில், ‘இன்று என் தந்தை கொழும்பிலிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு தங்காலைக்குத் திரும்புகிறார்.
இது அனைத்தும் ஆரம்பித்த இடமே. உண்மையான பலம் நமது வேர்களிலிருந்தே வரும், பதவிகளிலிருந்தோ அல்லது சலுகைகளிலிருந்தோ அல்ல என்பதை இது நினைவூட்டுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

