முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு நேற்று (12-09) பிணை; வழங்கியுள்ளது.
விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ரதன தேரர் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறும் நோக்கில் இவர் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ரதன தேரரை தலா 5 இலட்சம் மதிப்பிலான இரண்டு பிணையும் ரூ.10,000 பணக் பிணையும் வழங்கி விடுவித்ததோடு, வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

