இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கும் நிதி அமைப்பின் மீதான நம்பிக்கை, அவர்கள் கருதும் அபாய மூலாதாரங்கள் மற்றும் அவற்றின் நிகழ்த்தகூடிய சாத்தியக்கூறுகளை சுருக்கமாக வழங்குகிறது.
வெளியிடப்பட்ட முடிவுகள் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன் அவை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டாக கருதப்படமாட்டாது எனவும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு, இலங்கை நிதி அமைப்பின் மீதான அபாயங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த சந்தை பங்கேற்பாளர்களின் பார்வைகளை அளவிட்டு தொடர்ந்து கண்காணிக்கிறது.
ஆய்வுக்கான மாதிரியில் உரிமம் பெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள், சிறப்பு லீசிங் நிறுவனம், காப்பீட்டு நிறுவனங்கள், யூனிட் டிரஸ்ட் மேலாண்மை நிறுவனங்கள், மார்ஜின் வழங்குநர்கள் மற்றும் அண்டர்ரைட்டர்கள், பங்கு வணிக நிறுவனங்கள், உரிமம் பெற்ற சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்களின் அபாய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக் கணக்கெடுப்பின் முடிவுகள், குறிப்பாக நிதித் துறையில் அபாய மேலாண்மையில் ஈடுபட்டிருப்போருக்கு முக்கியமான ஆதாரமாக பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான இவ்விரைவு வெளியீடுகள் மத்திய வங்கி இணையதளத்தில் பார்வையிடலாம்
https://www.cbsl.gov.lk/en/publications/other-publications/systemic-risk-survey/

