கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆறு அபூர்வ பாம்புகள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
சுங்கத்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, உயிரியல் பல்வகைமை, பண்பாடு மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சோதனையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாங்காக் வழியாக சென்னை இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இலங்கை பெண் பயணியொருவர் (வயது சுமார் 40) தன்னுடைய பொருட்கள் பெட்டிகளுக்குள் இப்பாம்புகளை மறைத்திருந்தார்.
கைப்பற்றப்பட்ட பாம்புகளில் ஸ்பெகிள் கிங்ஸ்நேக் (Speckled Kingsnake) ஒன்று, மஞ்சள் அனகொண்டா ((Yellow Anaconda) ஒன்று, ஹொண்டுராஸ் மில்க் ஸ்நேக் (Honduran Milk Snakes) மூன்று, பால் பைத்தான் ((Ball Python) ஒன்று அடங்கும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

