பிரதமர் மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக்காக பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலான புதிய பயங்கரவாத தடை சட்ட வரைவு இந்த வாரம் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நானாயக்கார தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் ஹர்ஷண நானாயக்கார தெரிவித்ததாவது: ‘புதிய சட்ட வரைவு ஆங்கிலத்தில் அடுத்த வாரம் தயாராகி, ஜனாதிபதி மற்றும் தொடர்புடைய தரப்புகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
பின்னர் அது மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பொதுமக்கள் பரிசீலனைக்குத் திறந்துவிடப்படும்.’
அவர் மேலும் கூறியதாவது, ‘சட்டம் வெள்ளை ஆவணமாக வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில் ஆலோசனை காலம் ஒதுக்கப்படும்.
சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்க நேரம் எடுக்கக்கூடும். எனினும் ஆங்கிலப் பதிப்பு குறைந்தது ஒரு மாதம் பொதுக் கருத்துகளுக்காக வெளியிடப்படும். பொதுமக்களின் ஆலோசனைகள் ஜனநாயக பங்கெடுப்புக்கு அவசியமானவை.’
அரசாங்கத்தின் நோக்கம் சட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதாகும். ‘ஆலோசனைகள் முடிவடைந்தவுடன், இந்த ஆண்டு அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படும்’ என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
இந்த முன்னேற்றம், பல்வேறு வெளிநாட்டு அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய கடுமையான Pவுயு சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு முன், கடந்த மாதம் அரசு, புதிய சட்டத்தை செப்டம்பர் மாதத்திற்குள் கொண்டுவருவதாக அறிவித்திருந்தது.

