தேசிய ஆபத்தான போதைப்பொருள் அதிகார சபை(NDDCB) தெரிவித்ததாவது, மிட்டனியாவில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனக் கையிருப்பிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகள், மெத்தாம்பெட்டமைன் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் பொருளை கொண்டிருந்தன.
இந்த பறிமுதல் நடவடிக்கை கடந்த ; 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக சுமார் 50,000 கிலோ இரசாயனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
மிட்டனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன கையிருப்புடன் தொடர்புடையதாக முன்னாள் இலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் பியால் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் சகோதரர் இதுவரை தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

