1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெட்டா மத்திய பேருந்து நிலையம், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான புதுப்பிப்பு பணிக்குள் செல்ல உள்ளது. இதற்கான செலவு 424 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தொடர்பு மையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் நிறுவப்பட உள்ளன.
இப்பணிகளை இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் என்று தெரியவருகின்றது.
இதனுடன், கொழும்பு மருதானை தொடரூந்து நிலையத்திலும் இன்று புதுப்பிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படும் ‘ட்ரீம் டெஸ்டினேஷன்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், மருதானை தொடரூந்து நிலையத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கட்டிடக் கலைப் பண்பையும் காத்து நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

