மறுமலர்ச்சி நகரம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, உள்ளூராட்சி வாரம் இன்று (15-09) முதல் தொடங்கவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் பிரதி அமைச்சர் பி. ருவான் செனாரத் தெரிவித்ததாவது, சமூகங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் சூழலை உருவாக்குவது, வாழ்விடச் சூழலை பாதுகாப்பது மற்றும் எதிர்கால நகர அபிவிருத்திக்கான பார்வையை முன்வைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
‘மறுமலர்ச்சி நகரம் என்ற மையக் கருத்துடன் உள்ளூராட்சி வாரத்தை ஆரம்பித்து உள்ளோம்.
சமூகங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தியாகும் வகையில், வாழ்விடச் சூழல் காக்கப்படும் வகையில், நிலைத்த நகர அபிவிருத்திக்கான எதிர்காலக் கனவை நிலைநிறுத்தும் வகையில், பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.’

