இலங்கை மத்திய வங்கி தனது 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் மதிப்புள்ள ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.
புதிய நாணயத்தாளை தடை இன்றிக் கையாளவும் பரிமாற்றத்துக்கு வசதியாக்கவும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தற்போது தங்களது பணம் கையாளும் இயந்திரங்களில் தேவையான அளவமைக்கும் செயன்முறைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த செயன்முறையின் முன்னேற்றத்தின்படி, புதிய நாணயத்தாள்கள் படிப்படியாக உரிமம் பெற்ற வங்கிகள் வழியாக பொதுமக்களின் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்தப்படும்.
நாணயத்தாள் பரிமாற்றப்படுகின்ற இக்காலத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அனைத்து வங்கிகளிலும் அளவமைக்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன், புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை எந்தத் தடையும் இன்றிக் பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
இதையும் படியுங்கள்>தியாகி திலீபன் கிழக்கிலிருந்து வடக்கிற்கு வருகிறார்

