இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் துறையின் பணியாளர், ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சுங்கத் துறையினரின் தகவலின்படி, 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய 24 காரட் தங்க கட்டிகள், எடையில் 5.94 கிலோ, குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டன.
54 வயதான சந்தேகநபர், பணியாளர் வெளியேறும் வாயிலில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். தங்கக் கட்டிகள் அவரது காலுறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இவ்விடயத்தைச் சார்ந்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

