குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் மாதந்தோறும் பாஸ்போர்ட் வழங்கலில் ரூ.5 பில்லியன் வருமானம்
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மாதந்தோறும் ரூ.3 பில்லியன் முதல் ரூ.5 பில்லியன் வரை கடவுச்சீட்டு; வழங்கலின் மூலம் வருமானம் ஈட்டுவதாக திணைக்களத்தின் துணை கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊடக பேச்சாளர் மகேஷ் கருணாதச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய விளக்கத்தில் அவர் கூறியதாவது: விண்ணப்பம் சமர்ப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு; பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருநாள் சேவையின் கீழ் தினசரி 1,500 முதல் 2,000 வரை பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
சாதாரண சேவையின் கீழ் சுமார் 1,000 பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் தினசரி 4,000 முதல் 5,000 வரை பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ.20,000 என்றும், சாதாரண சேவைக்கான கட்டணம் ரூ.10,000 என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டைகள் அல்லது பிறப்புச் சான்றிதழ்களில் காணப்படும் பிழைகள் காரணமாக தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள் சரியாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மேலும், 16 வயதில் தேசிய அடையாள அட்டையை பெற்றவர்கள் காலப்போக்கில் உடலமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், பாஸ்போர்ட்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாக வழங்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

