உள்ளூர்

காசாவில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது – ஐ.நா விசாரணை ஆணைக்குழு

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் 1,200 பேர் உயிரிழந்ததோடு, 251 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர்
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இஸ்ரேல் காசா மீது வான்வழி மற்றும் தரைத் தாக்குதலை ஆரம்பித்தது.

அந்த தாக்குதல் இதுவரையும் தொடர்கிறது. கடந்த 22 மாதங்களாக நீடித்து வரும் இந்த போரில், காசாவில் குறைந்தது 64,905 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை பேரவையின் கீழ் சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. முன்னாள் மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையின் தலைமையில் மூவர் கொண்ட இந்தக் குழு, தனது விசாரணையை முடித்து 72 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட ஐந்து செயல்களில் நான்கு காசாவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவை: குறிப்பிட்ட குழுவினரை கொல்வது, உடல் மற்றும் மன ரீதியான கடுமையான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்கும் நோக்கில் வாழ்வாதார நிபந்தனைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுக்கும் செயற்பாடுகள் ஆகியவையாகும்.

இந்த முடிவுகள், இஸ்ரேல் தலைவர்களின் அறிக்கைகள், ராணுவ நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் உடனான பேட்டிகள், சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போரின் தொடக்கத்திலிருந்து சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

ஆயினும், ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த அறிக்கையை இஸ்ரேல் முற்றிலும் மறுத்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள இஸ்ரேல் தூதுவர், ‘ஐ.நா. மனித உரிமை ஆணையம் இஸ்ரேலுக்கு எதிரான பாகுபாடான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதால், இந்த ஆணைக்குழுவுடன் இஸ்ரேல் எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது’ என்று தெரி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்