நிதி, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சட்ட வரைவாளர், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில், 2022ஆம் ஆண்டு எண் 25 ஆக இயற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டத்தில் திருத்தங்கள் சேர்த்து சட்டமூலத்தை தயாரித்துள்ளார். இந்த வரைவிற்கு சட்ட மா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

