அம்பலாந்தோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு கொள்கலன்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பத் மணம்பேரி, சம்பந்தப்பட்ட நீதவான் ; நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (15-09) தெரிவித்தார்.
அந்தக் கொள்கலன்களில் ‘ஐஸ்’ போதைப்பொருள் ; (Crystal Methamphetamine) தயாரிக்கப் பயன்படும் இராசயனப் பொருட்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்றம், மணம்பேரி சரணடையும் போது அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறை மா அதிபருக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த உத்தரவு தொடர்பான தகவலை விசாரணை அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு, மணம்பேரியின் சட்ட குழு தாக்கல் செய்த writ petition ஒன்றை பரிசீலித்த பிறகே பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மணம்பேரி மீது, பாதாளகுழுவின் முக்கிய நபர் என அறியப்படும் ‘கெஹெல்பட்டற பத்மே’ எனும் குற்றச்சாட்டுக்காரருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ‘ஐஸ்’ தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் நிறைந்த இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது அவர், இந்தோனேசியாவில் இருந்து இருந்து கொண்டுவரப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

