11 மாணவர்கள்; கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஆஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னகொடாவை சந்தேக நபர் பட்டியலிலிருந்து நீக்கிய சட்ட மா அதிபரின் முடிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் நேற்று (15-09) அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கு தொடர்பான அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மனுவை விசாரிக்க வரும் ஆண்டின் (2026) ஜனவரி 30ஆம் திகதி உச்சநீதிமன்றம் நாளாக நிர்ணயித்துள்ளது.

