இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தப்பட்டது. இதே கலந்துரையாடல் இன்று புதன்கிழமை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் 19 உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்றனர். இதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் அடங்கினர்.
சுவிஸ்லாந்தில் நடைபெறும் கலந்துரையாடல் அங்கு உள்ள அரசியல் நிர்வாக அமைப்புகள், குறிப்பாக சமஸ்டி ஆட்சி முறை போன்றவை தொடர்பாக நடைபெறுகிறது.
புதிய அரசாங்கம் உருவாகும் போது இனப் பிரச்சினைக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படுமென முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இரண்டு நாள் கலந்துரையாடலில் சிங்கள, தமிழ் கட்சிகள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புள்ளன.
ஆனால், இதுவரை இலங்கை அரசாங்கத்தால் இதற்கான உத்தியோகப்பூர்வ பதில் தெரிவிக்கப்படவில்லை. கலந்துரையாடல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அறிக்கையாக வழங்கப்படும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

