நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் உரிமைக்காக தியாக தீபம் திலீபன் 12 நாட்கள் உணவும் நீரும் தவிர்த்து உயிர்தியாகம் செய்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான அவர், இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி அவர் உணவும் நீரும் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு வீரச்சாவடைந்தார்.
யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

