தாமதமாக நடைபெறும் மாகாண சபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026) வரவுசெலவு திட்டத்தில் ரூ. 10 பில்லியன் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்த்னாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், தேர்தலுக்கான நிதி வருடாந்தம் கோரப்படுவதாகவும், தேர்தல்கள் நடைபெறும் வரை இந்த கோரிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
‘தேர்தல் நடக்கவிருக்கும் பொழுது தேவையான நிதியை கோருகிறோம். கடந்த ஆண்டு (2024), மாகாணசபை தேர்தலுக்காக நிதி கோரப்பட்டதன் பிறகு தேர்தல்கள் நடக்காத காரணத்தால், இவ்வாண்டும் நிதி கோரப்பட்டுள்ளது,’ என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, தேர்தல் ஆணையத்தின் கணக்கு பிரிவின்; தகவலின் படி, ரூ. 10 பில்லியன் ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
மாகாண சபை தேர்தல்கள் பல வருடங்களுக்கு தாமதமானதன் காரணம், 2015–2020 அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை எனக் கூறப்படுகிறது.

