யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வன்முறை கும்பல் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (16) இரவு, நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் புகுந்த கும்பல், அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு நடத்தி விட்டு தப்பிச் சென்றது.
இந்த தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அறிந்து இடத்திற்கு விரைந்த பொலிஸார்மீதும் தாக்குதலாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
தப்பிச் சென்ற மற்ற கும்பல் உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

