அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (16-09) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன.
இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டன.
ஆனால், இந்நிலையங்களை நடத்தி வந்திருந்த சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

