இணையவழி தளங்கள் வழியாக வழங்கப்படும் பாலியல் தொல்லைகள்; தொடர்பாக எழுந்துள்ள முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளரும் ; உதவி பொலிஸ் அத்தியட்சகருமான வழக்கறிஞர் எப்.யு. வூட்லர், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘இந்த விவகாரம் தொடர்பாக சில முறைப்பாடுகள்; கிடைத்துள்ளன. அவற்றை சைபர் குற்றப் பிரிவு கவனத்தில் கொண்டு விசாரணை செய்து வருகிறது.
ஒன்லைன் வழியாக நடைபெறும் பாலியல் தொல்லைகள், மனிதர் கடத்தல் அல்லது சட்டவிரோத பாலியல் சேவைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை சட்டத்திற்கிணங்க இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வயதினை எட்டியவர்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாகாது. ஆனால் இத்தகைய சேவைகள் குற்றமாகக் கருதப்படக்கூடிய விதத்தில் இடம்பெற்றால், குற்றச் சட்டம் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

