இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசின் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம், ஊழல் மற்றும் வீணாக்கத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி என்ற சமூக அமைப்பின் தலைவர் கமந்த துஷாரா, இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
அவர், 2006ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்ட எண் 5ன் கீழ் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார்.
முறைப்பாடு செய்யப்படடுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்:
சுகாதாரம், தகவல் ஊடகம் மற்றும் அரசாங்கத் துருத்துக் குழு தலைவர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ
போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க
வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க
எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துரெட்டி
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் வழக்கறிஞர் சுனில் வடகலா ஆகியோராகும்
துஷாரா, தாம் அளித்த புகாரை ஊஐயுடீழுஊ ஏற்றுக்கொண்டதாகவும், இதேபோன்ற வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக முன்னர் விசாரிக்கப்பட்டது போலவே இம்முறைவும் விசாரணை தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சில அரசியல்வாதிகள் வைத்திருக்கும் சொத்துகள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. எனினும், அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் (16ஆம் திகதி) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குற்றச்சாட்டுகள் அரசியல்வாதிகளே சமர்ப்பித்த சொத்து அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையெனவும், தாங்கள் பெற்ற வருமானத்தின் மூலாதாரங்களை நிரூபிக்க முடியும் எனவும் விளக்கம் அளித்தார்.

