தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அதன் முக்கியஸ்தர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள், வவுனியா மாநகரசபை முதல்வர் சு. காண்டீபன், மாநகரசபை உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்தப் பகுதியில் வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகள் தொடருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், செப்டம்பர் 25 ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.

