தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி பவனி இன்று காலை மன்னார் நகரத்தை வந்தடைந்தது.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்தை தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரமாக தமிழர் தாயகப் பகுதிகளில் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், மன்னார் மக்களும் அஞ்சலியில் பங்கேற்கும் வகையில் இன்று வருகை தந்திருந்தது.
இந்நிகழ்வின் போது பொதுமக்களுடன் அருட்தந்தையர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினர். மன்னார் நகரின் பிரதான சுற்றுவட்டப் பகுதியில் ஊர்தி நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதுடன், பின்னர் மன்னார் பேருந்து நிலையப் பகுதியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

