கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பின் படி, 2025 (2026) கல்விப் பொது சாதாரணதர பரீட்சையான (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 9 வரை இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபர் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய வழிமுறைகளை பின்பற்றி, நேரடியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து விண்ணப்பங்களும் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு www.doenets.lknrd சென்று வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிவிப்பு வலியுறுத்துகிறது.

