இலங்கை மின்விநியோக சபை தற்போது மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால், மேலும் சில மாதங்கள் அது இயங்க வேண்டியிருக்கும் நிலையில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலா தற்போது வகித்து வரும் இடைக்காலத் தலைவருக்கு பதிலாக நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ECA பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிகா, ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது:
‘ஊநுடீ ஏற்கனவே நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், மறுசீரமைப்பு முழுமை பெறும் வரை அது மேலும் சில மாதங்கள் இயங்க வேண்டியுள்ளது.
அமைச்சின் செயலாளர் ஏற்கனவே மிகுந்த பணிச்சுமையில் உள்ளார். அவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலும் அளிக்கவில்லை. எனவே அரசு வேறு ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும்’ என்றார்.
மேலும், அமைச்சின் செயலாளர் இடைக்காலத் தலைவராக செயல்படுவதால், சபையின் முடிவெடுப்பு செயல்முறைகளில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘இது பிரச்சினை இல்லை, ஏனெனில் முடிவுகள் இயக்குநர் சபையால் எடுக்கப்படுகின்றன என்ற பதிலை நாங்கள் பெறுகிறோம். ஆனால், அவர் அமைச்சின் செயலாளராக இருப்பதால் இயக்குநர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

