நெஞ்சில் டாட்டூவுடன் தோன்றிய நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின்னர், அஜித் சர்வதேச கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ‘யுதiவா முரஅயச சுயஉiபெ’ எனும் அணியை உருவாக்கியுள்ளார். இவ்வணி உலகின் பல நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.
டுபாய், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற இந்த அணி, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் கலந்துகொண்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு அஜித் தனது குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். இந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அந்த படங்களில் அஜித் தனது நெஞ்சில் ஒரு டாட்டூவுடன் காணப்படுகிறார். கடவுள் உருவத்தை ஒத்த அந்த டாட்டூ உண்மையா அல்லது வரவிருக்கும் படத்திற்காக தற்காலிகமாக வரைந்ததா என்பது குறித்து இரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
