மினுவாங்கொடை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வற்புனர்வுக்குட்படுத்தப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் பூசி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது போன்ற கொடூரச் செயல் ஒன்று பதிவாகியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த வயோதிப மாதுவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அந்த பெண் தனிமையாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று (24) அயல் வீட்டுப் பெண் ஒருவர் வீடு வந்து பார்த்தபோது, முகத்தில் மிளகாய்த் தூள் பூசப்பட்டு கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
மினுவாங்கொடை பதில் நீதவான் இந்திராணி ரத்நாயக்க சம்பவ இடத்தை பார்வையிட்டு, சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக கம்பஹா சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்ப பணித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காணவும் கைது செய்யவும் மினுவாங்கொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

