காத்தான்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் 66 வயது நபரின் மனிதத் தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்த நபர் குளத்தில் நீராடியபோது முதலை தாக்குதலுக்கு ஆளானிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மலளநயான குளத்தில் அதிக அளவில் முதலைகள் இருப்பது முன்பிருந்தே அறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட மனிதத் தலை பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

