அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் கல்வி அமைச்சின் முடிவை மாற்ற வாய்ப்பில்லை என அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.
இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்(CTU) கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இந்த முடிவை ஏற்க முடியாது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
CTU தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது ‘மேற்படிப்பு (A/L) பரீட்சைகள் முடிந்த பின் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
அரசாங்கம் இந்த முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இது எந்த உளவியல் அல்லது கல்வி ஆய்வின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டதல்ல. எனவே, பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் தீர்மானம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்,’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, இந்த முடிவை எந்தக் காரணத்திற்கும் ஏற்க முடியாது என்றாலும், அமைச்சருடன் விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் முடிவு திரும்பப் பெறப்படாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சு செயலாளர் நளக கலுவேவா, அமைச்சு தேசிய கல்வி நிறுவனம் (NIE) வடிவமைத்த கல்வி மாற்றங்களையே செயல்படுத்தி வருவதாக விளக்கமளித்தார்.
(NIE) இந்த மாற்றங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் நிபுணத்துவம் பெற்றது. நாங்கள் செய்கிறோம் என்பதெல்லாம் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதுதான்,’ என அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், முதலில் Nஐநு ஒவ்வொரு பாட நேரத்தையும் ஒரு மணி நேரமாக்க பரிந்துரைத்ததாகவும், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு அமைச்சு அதை 50 நிமிடங்களாகக் குறைத்ததாகவும் தெரிவித்தார். இதனால் ஒவ்வொரு பாடமும் 50 நிமிடமாக நீளும் போது பள்ளி நேரமும் பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
2026 ஆம் ஆண்டு முதல் அமலாகவுள்ள இந்த மாற்றத்தின்படி பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். தற்போது 1.30 மணிக்கு முடிவடையும் நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்கப்படுகிறது. கல்வி அமைச்சு தெரிவித்ததாவது, இந்த மாற்றத்தின் நோக்கம் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தவும், கொவிட்-19 போன்ற இடையூறுகளால் இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்யவும் உதவும் என மேலும் தெரிவித்துள்ளார்.

