போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸாரின் கடமைக்கு இடையூ+று விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்இ அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (1) உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்இ கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவூ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியொன்றில்இ உடுகம்பொல சதிபொல அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
போக்குவரத்து விதிமீறலுக்காக அந்த பெண் ஓட்டிச் சென்ற காரை நிறுத்துமாறு பொலிஸார் அறிவித்தபோதும்இ அவர் அதை புறக்கணித்து சென்றுஇ பொலிஸாரின் கடமையில் இடையூ+று ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் காரை துரத்திச்சென்று உடுகம்பொல பகுதியில் நிறுத்தி சோதனை செய்தபோதுஇ குறித்த பெண் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் கடந்த 31.10.2025 அன்று கம்பஹா பொலிஸ் பிரிவின் கொட்டகொட–உடுகம்பொல சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போதுஇ குறித்த பெண் தன்னை “மூத்த பொலிஸ் அதிகாரி ரன்மல் கொடிதுவாக்குவின் சகோதரி” என்றும்இ “எந்த குற்றமும் செய்யவில்லை; எனக்கு அனைத்து ஆவணங்களும் உள்ளன” என்றும் கூச்சலிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்துஇ அவர் கைது செய்யப்பட்டு இன்று (01.11.2025) கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஆயினும்இ குறித்த பெண் கூறிய “மூத்த பொலிஸ் அதிகாரியின் சகோதரி” என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவூ உறுதிப்படுத்தியூள்ளது.
குற்றவியல் பலாத்காரம்இ பொலிஸ் சிக்னல்களை புறக்கணித்தல்இ ஆபத்தான மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டம்இ மேலும் வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


