முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரத்திற்கு அருகிலுள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில், அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற திடீர் சோதனையின் போது, பொது சுகாதார பரிசோதகர்கள் சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய மரக்கறிகள் உணவாக தயாரிக்கப்படவிருந்ததை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் நிறுவனத்திற்கு ரூ.30,000 அபராதத்தை விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கை விடுத்தது.
இந்த சோதனை நடவடிக்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

