இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியூள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற இந்த விபத்தில் பத்து பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏகாதசி சிறப்பு நாளை முன்னிட்டு வெங்கடேஷ்வரா சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் திரண்டனர்.
திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பத்து பேர் சிக்கி உயிரிழந்ததாக ஆந்திர மாநில சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியூள்ளது.
மேலும்இ பலர் படுகாயம் அடைந்துள்ளதுடன்இ அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த சோகச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும்இ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும்இ காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50இ000 ( இந்திய ரூபாய்) நிதி உதவியூம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேவேளைஇ இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்களும் தங்களது இரங்கலைப் பதிவூ செய்து வருகின்றனர்

